ரேஸ் பற்றி கமல் பேச்சு ட்ரோல்: ஏகே ஃபேன்ஸ் செம பதிலடி

யாரோ எப்போதோ எதற்கோ பேசிய தகவல்களை எடிட் செய்து, தற்போது ட்ரோல் செய்வது கூட ஓவர் சேட்டை தான். அப்படியொரு நிகழ்வு காண்போம்..

மணிரத்னம் இயக்கத்தில், நீண்ட வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் ஜுன் 5-ந்தேதி ரிலீஸாக உள்ளது. இச்சூழலில், கமல்ஹாசன் ட்ரெண்டிங்கில் வர ஆரம்பித்திருக்கிறார். அதாவது, அவரது பழைய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. அதில், பேசிய தகவல் என்னவென்றால்,

‘சினிமா தொழில் என்பதே விளையாட்டுதான். நான் இதுவரை வெளியே சொல்லாத விஷயத்தை சொல்கிறேன். வாழ்க்கையில் நான் சீட்டு விளையாடியது கிடையாது. லாட்டரி சீட்டு வாங்கியதில்லை. ரேஸுக்கு போனதே கிடையாது.

அப்பா நிறைய லாட்டரி வாங்குவார், சாருஹாசன் சீட்டு விளையாடுவார். ஆனால், அதை யாரும் செய்யக்கூடாது என்று என்னிடம் சொன்னது கிடையாது. எனக்கு ஆரம்பத்திலிருந்தே அதன் மீதெல்லாம் ஆர்வம் இல்லை’ என்றார். இந்த வீடியோ ஒருபக்கம் ட்ரெண்டானாலும் இன்னொரு பக்கம் அஜித் ரசிகர்களை சிலர் இதில் இழுத்து விடுகின்றனர்.

அதாவது, ரேஸுக்கு போனதே கிடையாது என்று கமல்ஹாசன் சொல்வதை பார்த்தால், கார் ரேஸையும் சேர்த்து சொல்கிறாரோ; அஜித்தும் இதில் சம்பந்தப்படுகிறாரோ என கோர்த்து விடுகின்றனர்.

அதற்கு ஏகே ரசிகர்களோ, அவர் சொன்னது குதிரை ரேஸ் போன்றவற்றை. கார் ரேஸை அல்ல; வேண்டுமென்றே சிலர் இப்படியெல்லாம் வம்பு தும்பு பேசி வருகிறீர்கள்; நாங்க தல ஃபேன்ஸ் குட் உஷார்’ எனவும் ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா..யாரும் வந்து உரசுற வரையில; பேட் ஃபேன்ஸா ஆக்காதீங்க’ எனவும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ajith fans trolled with a throwback interview by kamal
actor ajith kumaractor kamal haasanthug life movieரசிகர்கள்விளையாட்டு