என் மகளுடன் சேர்ந்து அவர் காலில் விழுந்தேன்.. இளையராஜா குறித்து வனிதா விஜயகுமார் கோபமான பதில்.!!

இளையராஜாவுக்கு எதிராக வனிதா பேசியுள்ளார்.

actress vanitha vijayakumar talk about ilayaraja

தமிழ் சினிமாவில் பழம்பெறும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகுமார். இவரது மகள் வனிதா விஜயகுமார். ஆரம்பத்தில் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தால். நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிலையில் தற்போது இவரது நடிப்பில் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ராத்திரி சிவராத்திரி என்ற பாடலை இளையராஜாவின் அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக வழக்கு தொடர்ந்திருக்கிறார் இது மட்டுமில்லாமல் அந்த பாடலை உடனே நீக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

இது குறித்து வனிதா விஜயகுமார் பேசியுள்ளார் அதாவது இளையராஜாவிடம் இந்த பாடலை பயன்படுத்த தனிப்பட்ட முறையில் பேசினேன் என் மகளுடன் சேர்ந்து அவர் காலில் விழுந்தேன் ஓகே என்று தான் சொன்னார் அதன் பிறகு சோனி நிறுவனத்திடம் அனுமதி வாங்கினேன். நேரில் சென்று கேட்டபோதே திட்டி இருக்கலாமே இப்போது வந்து வழக்கு மட்டும் போடுறீங்களே என்று கோபமாக பேசி உள்ளார்.

இது மட்டும் இல்லாமல் இளையராஜா குடும்பத்துடன் இருக்கும் பிணைப்பு குறித்து கண்ணீருடன் பேசிய வனிதா அவர் வீட்டுக்கு நான் மருமகளாக போக வேண்டியவர் என்றும் சொல்லியிருக்கிறார்.

இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

actress vanitha vijayakumar talk about ilayaraja
'மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்aboutactress vanithaactress vanitha vijayakumar talk about ilayarajatalkVijayakumarஇளையராஜாவனிதா விஜயகுமார்