“மேரேஜ் ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

ரீல் பெட்டி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய காமெடி-கமர்ஷியல் திரைப்படமான ‘மேரேஜ் ஸ்டோரி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம், 2024-ஆம் ஆண்டு வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘அத்தோமுகம்’ திரைப்படத்திற்குப் பிறகு, இயக்குநர் சுனில் தேவ் மற்றும் நடிகர் எஸ்.பி. சித்தார்த் மீண்டும் இணையும் படைப்பாக அமைந்துள்ளது.

முன்னதாக த்ரில்லர் கதைக்களத்தில் ரசிகர்களை கவர்ந்த இந்த வெற்றிக்கூட்டணி, இந்த முறை முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையில் குடும்பம், நட்பு, காதல் மற்றும் நகைச்சுவை அம்சங்கள் நிறைந்த முழுமையான பொழுதுபோக்கு திரைப்படத்துடன் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது.

‘மேரேஜ் ஸ்டோரி’ திரைப்படத்தில் எஸ்.பி. சித்தார்த், ஷபானா ஷாஜஹான் ஆர்யன் மற்றும் தீபிகா வெங்கடாச்சலம் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் மூத்த நடிகர்களான நாசர், நிழல்கள் ரவி, அருள்தாஸ் மற்றும் புதுவை பூபாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குடும்ப ரசிகர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் உருவாகி வரும் இந்த திரைப்படம், நகைச்சுவை, காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களை ஒருங்கிணைத்த ஜனரஞ்சக படைப்பாக இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப ரீதியாகவும் வலுவான அணியை கொண்டுள்ள இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவை தமிழ்செல்வன் கவனிக்கிறார். இசையை தீபன் சக்ரவர்த்தி அமைத்துள்ளார். படத்தொகுப்பை தமிழரசன் மேற்கொள்கிறார். சண்டைக் காட்சிகளை மிராக்கிள் மைக்கேல் வடிவமைத்துள்ளார்.

‘அத்தோமுகம்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள சுனில் தேவ் – எஸ்.பி. சித்தார்த் கூட்டணி என்பதால், திரைப்பட வட்டாரங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் ‘மேரேஜ் ஸ்டோரி’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.

தொழில்நுட்பக் குழு:

இயக்கம்: சுனில் தேவ்
ஒளிப்பதிவு: தமிழ்செல்வன்
இசை: தீபன் சக்ரவர்த்தி
படத்தொகுப்பு: தமிழரசன்
சண்டைப் பயிற்சி: மிராக்கிள் மைக்கேல்
தயாரிப்பு நிறுவனம்: ரீல் பெட்டி புரொடக்ஷன்ஸ்

கலகலப்பும், குடும்ப உணர்வுகளும், காதலும் இணைந்த முழுமையான திரையரங்கு கொண்டாட்டமாக உருவாகி வரும் ‘மேரேஜ் ஸ்டோரி’, அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் சிறந்த பொழுதுபோக்கு அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Deepika VenkatachalamFirst Look of Comedy Entertainer 'Marriage Story'Marriage StoryS.P. SiddarthShabana Shahjahan Aryan