பிளாக் டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சினேகா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சினேகா. இவர் தமிழில் புன்னகை தேசம், ஆனந்தம், பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பிரிவோம் சந்திப்போம், சிலம்பாட்டம் ,பவானி ஐபிஎஸ், புதுப்பேட்டை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் விஜய்க்கு ஜோடியாக கோட் படத்தில் நடித்திருந்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு நடுவராகவும் இருந்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் பளிச்சின்னு விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.