சீண்டலாக கேள்வி கேட்டவருக்கு, நடிகர் சுதீப் செம பதிலடி; வைரலாகும் நிகழ்வு..
சமீபத்தில், நடிகை சினேகாவிடம் ஒரு நபர் ‘உங்கள் அழகின் ரகசியம் என்ன?’ என கேள்வி கேட்டதற்கு, அருகிலிருந்த பிரசன்னா, ‘கேள்வி கேட்டவரைப் பார்த்து நாக்கை துருத்தி செல்லமாக மிரட்டினார். அதுபோல ஒரு நிகழ்வு இதோ. இது வேறலெவலில் வைரலாகும் சுதீப்பின் பதிலடி.. விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க்’ என்ற படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற 25-ந்தேதி ரிலீஸாகிறது. இதன் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து […]