புடவையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சினேகா.
- Advertisement -
என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சினேகா. இவர் அதனை தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம் , புன்னகை தேசம் ,பார்த்திபன் கனவு ,ஆட்டோகிராப், வசூல்ராஜா எம்பிபிஎஸ், பிரிவோம் சந்திப்போம், சிலம்பாட்டம், கோவா ,பவானி ஐபிஎஸ் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பட்டுப்புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.