தமிழ் படங்களில் அதிகம் நடிக்காதது ஏன்? கேள்விக்கு சமந்தா பதில்..!

தமிழ் படங்களில் அதிகம் நடிக்காததற்கு ஏன் என்ற கேள்விக்கு சமந்தா பதில் கொடுத்துள்ளார்.

actress samantha latest speech viral

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பானா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்க மகன் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

ஆனால் சமீபமாக தமிழில் இவரது நடிப்பில் திரைப்படம் எதுவும் வெளியாகாமல் இருக்க, தமிழில் நடிக்காதது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலளித்த சமந்தா, நிறைய படங்கள் நடிப்பது எளிமை தான் ஆனால் இதுதான் எனது கடைசி படம் என்று என்னை யோசிக்கும் அளவுக்கான படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் நான் நினைப்பது.

இது மட்டும் இல்லாமல் முக்கியமான அந்தக் கட்டத்தில் தான் நான் இருப்பதாக உணர்கிறேன் ஒரு நடிகையாக சவால் நிறைந்த கேரக்டர்களை நடிக்கவே விரும்புகிறேன் எனக்கு மனநிறைவு தராத படங்களில் எப்போதும் நான் நடிப்பதே கிடையாது என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress samantha latest speech viral
10 எண்றதுக்குள்ளactress samanthaactress samantha latest speech virallatest speechviralகத்திதங்க மகன்நான் ஈநீ தானே என் பொன்வசந்தம்பானா காத்தாடி