சிம்ரன் மீது, தற்போது ரீ என்ரி கொடுத்துள்ள மந்த்ரா பாய்ச்சல்..

நடிகை மந்த்ரா அருண் விஜய்க்கு ஜோடியாக ‘பிரியம்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிப்படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.

அஜித்துடன் ரெட்டை ஜடை வயசு, விஜய்யுடன் லவ் டுடே மற்றும் சிம்மாசனம் என பல படத்தில் நடித்து வந்தார். தமிழை விட தெலுங்கில் ராசி என்ற பெயரில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பின்னர், 2005-ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீமுனியை திருமணம் செய்து கொண்டார். குழந்தை பிறந்த பின் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்தார். குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதற்கிடையில் மவுலி ராதாகிருஷ்ணன் தயாரித்து, நவீன் டி.கோபால் இயக்கி அருணாசலம், ஜனனி நடித்துள்ள ‘உசுரே’ படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். 2016-ம் ஆண்டு ‘கவலை வேண்டாம்’ என்கிற படத்தில் நடித்திருந்தார். தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மீண்டும் நடித்துள்ளார். இது குறித்து மந்த்ரா தெரிவிக்கையில், ‘தமிழ் சினிமாவை விட்டு நான் எங்கும் போய்விடவில்லை. இடையில் கொஞ்சம் கேப் விழுந்துவிட்டது. நல்ல கதாபாத்திரத்துக்காக காத்திருந்தேன்.

அந்த வகையில் ‘உசுரே’ படத்தில் நடித்துள்ளேன். நிறைய பேர் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். நானும் அப்படி ஒரு அம்மா ரோலில் நடித்துவிட்டு போக விரும்பவில்லை. ஒருநாள் படப்பிடிப்பாக இருந்தாலும், அந்த கதாபாத்திரம் வலிமை மிக்கதாக இருக்க வேண்டும். அப்படித்தான் இந்த படம் எனக்கு கிடைத்துள்ளது’ என்றார்.

முன்னதாக, டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் சிம்ரன் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. அவ்வகையில், சிம்ரனை மந்த்ரா இடித்துரைக்கிறாரோ? என நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

actress manthra to make her tamil comeback after 9 years
actress manthraactress simrantourist family movieஅஜித்குமார்விஜய்