ஸ்லிம் உடல்வாகுடன் சிலிர்ப்பான நடிப்பில் கவர்ந்தவர் மனீஷா கொய்ராலா.
பாலிவுட்டில் தற்போதும் பட வாய்ப்புகளைப் பெற்றுவரும் நடிகையாக இருக்கிறார். இவர் மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தொடர்ந்து இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ், போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த ‘பாபா’ படம் பற்றி ஒரு தகவலை பகிர்ந்துள்ளது தற்போது பரபரப்பாக தெறிக்கிறது.
‘நான் பாலிவுட்டில் அதிக படங்கள் நடித்து வந்தாலும், அவ்வப்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வந்தேன். அங்கு எனக்கு ஒரு மார்க்கெட் உருவாகி இருந்தது.
‘பாபா’ படத்தில் நடித்த பிறகு, எனக்கு சினிமா வாய்ப்புகள் குறையும் என்று நான் கணித்தேன். பின்னாளில் அதுதான் நடந்தது. தென்னிந்திய சினிமாவில் என்னுடைய திரை வாழ்க்கைக்கு பேரழிவை உண்டாக்கிய படம் அது’ என கூறியுள்ளார்.
இது பற்றி ரஜினி பட ஆர்வலர்கள் மனீஷாவை செமையாய் பங்கம் செய்து வருகின்றனர்.
முன்னதாக, மனிஷா நடிப்பில் கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘ஹீரமாண்டி’ என்ற பாலிவுட் வெப் தொடர் வரவேற்பு பெற்றது.