ஸ்ருதிஹாசன் வருகையால், பூஜா ஹெக்டே அப்செட் மூடில் உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்..
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, சிம்புதேவன் இயக்கிய புலி படத்தில் விஜய்யின் மனைவியாக ஸ்ருதி நடித்திருந்தார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் மீண்டும் நடிக்க உள்ளார்.
‘ஜனநாயகன்’ படத்தில் மற்றொரு ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்க போகிறாரா அல்லது கேரக்டர் ரோலில் நடிக்க போகிறாரா? என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.
- Advertisement -
தென்னிந்திய மொழிகளில் ஸ்ருதிஹாசன் 2023-ம் ஆண்டு தெலுங்கில் நடித்த ‘சாலர்’ முதல் பாகம் படத்திற்கு பிறகு எதிலும் நடிக்கவில்லை. சுமார் 2 ஆண்டுக்கு பிறகு தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.
அவ்வகையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கூலி’ படத்திலும், டிரெயின் என்ற படத்திலும் நடிக்க கமிட்டாகி உள்ளார். இதற்கு பிறகு சாலர் 2 படத்திலும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் ‘ஜன நாயகன்’ படமும் அவரது படப்பட்டியலில் இணைந்துள்ளதாக சொல்லப்படுவதால், மீண்டும் தென்னிந்திய சினிமாவில் ஸ்ருதி ஹாசன் முன்னணி நடிகை இடத்தை பிடிப்பார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், பூஜா ஹெக்டே அப்செட் ஆகியுள்ளார். ‘ஜனநாயகன்’ படத்தில் ஹீரோயினாக கமிட் ஆனாலும், அரசியல் படமாகவும் இருப்பதால் தனது ரோல் முக்கியத்துவமாக இருக்காது’ என ஃபீல் செய்த நிலையில், ஸ்ருதிஹாசனும் கமிட் ஆவதால், பூஜா செம அப்செட் மூடில் இருப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.