சினிமாவில் பின்னணி பலம் இருந்தாலும், தன்னை முன்னுறுத்தி தனித்த முத்திரை பதித்த நடிகர் சூர்யா. ‘அகரம்’ என பொதுவாழ்விலும் மனிதநேய மாமனிதர் தானே.!
தற்போது, சூர்யா தன் திரைவாழ்க்கையில் இன்றுடன் 28 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கின்றார். அவரின் முதல் படமான வஸந்த் இயக்கத்தில் வெளியான ‘நேருக்கு நேர்’ படம் இன்றுடன் வெளியாகி 28 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
இயக்குனர் வஸந்த் மற்றும் படக்குழுவினர் சூர்யாவிற்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்க, அவர் இப்படத்தில் நடித்து முடித்தார். அதன் பிறகு கிடைத்த கடுமையான விமர்சனங்களால் சூர்யாவிற்குள் நல்லதோர் மாற்றம் நிகழ்ந்தது. தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, கிடைத்த வாய்ப்பு, இயக்குநர் பாலாவின் ‘நந்தா’ திரைப்படம்.
தற்போது கார்த்திக் சுப்பராஜின் ‘ரெட்ரோ’ படம் முடிந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ படத்தில் களமிறங்கியுள்ளார் சூர்யா. உழைப்பு தானே உயர்வு என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.