சம்பளம் வேண்டாம், ரஜினி சாருடன் நடித்ததே போதும்: அமீர்கான் பெருமிதம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படம், முதல் நாளிலேயே 150 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ரஜினியின் 171-வது படமான இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா என பலர் நடித்துள்ளனர். பாலிவுட் ஸ்டார் அமீர்கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்துக்காக, மெகா ஸ்டாரான அமீர்கான் ரூ.20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக வலைதளத்தில் செய்தி பரவியது. ஆனால், இதை அமீர்கான் மறுத்துள்ளார்.

‘கூலி படத்துக்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. நான் ரஜினி சார் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறேன். அவருடன் நடித்ததே எனக்குப் பெரிய பரிசுதான். அதனால், பணம் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை’ என அமீர்கான் தெரிவித்துள்ளார்.

‘கூலி’ படத்தில் கேங்ஸ்டர் தாஹா என்ற கேரக்டரில் 10 நிமிட காட்சிகளில் வந்து செல்வார் அமீர்கான். அவர், சம்பளம் கேட்டிருந்தால் கிடைத்திருக்கும். ஆனால், மறுத்துள்ள நிகழ்வு ரஜினியின் மீதான மரியாதையை பிரதிபலித்துள்ளது.

actor aamir khan about his coolie movie salary
aamir khancoolie movieRajinikanthரஜினிகாந்த்லோகேஷ் கனகராஜ்