‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் ஹீரோவாக நடித்த படத்தின் ஷுட்டிங் நிறைவு..

இயக்குநர்கள் ஹீரோவாக நடிப்பது தொன்றுதொட்டு தொடரும் நிகழ்வு. அவ்வகையில், கோமாளி என்ற படம் இயக்கிய பிரதீப் ரங்கநாதனை தொடர்ந்து, தற்போது அபிஷேக் ஜீவிந்த் வருகின்றார்.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், நாயகனாக நடிக்கும் படத்தை “லவ்வர்’, ’டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் எழுதி இயக்குகிறார்.

எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஸயான் பிலிம்ஸ் சார்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணை தயாரிப்பு செய்கிறார். அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

நவீன கால இளைஞர்களைக் கவரும், காதல் கதையாக உருவாகும் இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக 35 நாட்களில் முடிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

மேலும், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படம், கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகவுள்ளது.

abishan jeevinth as hero film shooting compeleted
director abishan jeevinthLove StoryTourist Familyஅபிஷன் ஜீவிந்த்காதல் கதை