அஜித் ரசிகர் கேட்ட கேள்வி, நம்பிக்கை கொடுத்த ஜிவி பிரகாஷ்..!
அஜித் ரசிகரின் கேள்விக்கு ஜி.வி பிரகாஷ் நம்பிக்கை கொடுத்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
ஏற்கனவே இந்த படத்திற்கான இசையமைக்கும் பணியை தொடங்கியதாக ஜிவி பிரகாஷ் அப்டேட் ஒன்று கொடுத்துள்ளார். தற்போது அஜித் ரசிகர் ஜிவி பிரகாஷிடம் ஒன்று கேட்டுள்ளார்.அதாவது ப்ரோ எங்களோட கடைசி நம்பிக்கை குட் பேட் அக்லி மட்டும் தான் அந்த மியூசிக் நெருப்பு சேர்த்து விடுங்கள்.. தியேட்டர் சிதறட்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு ஜிவி பிரகாஷ் தீயா வேலை செஞ்சுட்டு இருக்க அதை நீங்க சீக்கிரமே தியேட்டரில் பார்ப்பீர்கள்.. என்று பதிலளித்துள்ளார் ஜிவி பிரகாஷின் இந்த பதில் பதிவு அஜித் ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இது மட்டும் இல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரிக்கச் செய்துள்ளது.
