காந்தாரா படத்தைத் தொடர்ந்து தெய்வீக மர்மத் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் ‘ஆதி ருத்ரா’

Web Ads

‘காந்தாரா’ திரைப்படத்தைத் தொடர்ந்து தெய்வீகம், ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் மற்றுமொரு பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படமாக ‘ஆதி ருத்ரா’ உருவாகிறது. ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை Trishul Entertainments நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை பிரசாந்த் G. ருத்ரப்பா தயாரிக்கிறார். ‘டண்டுபால்யா’, ‘கிருஷ்ண பிரணய சகி’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த அனுபவம் கொண்ட இவர், இயக்குநர் நவரசன் எழுதி இயக்கும் ‘ஆதி ருத்ரா’ திரைப்படத்தைப் பிரம்மாண்டமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.

1960 முதல் 1990 வரையிலான காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு, தெய்வீக மர்மங்கள், ஆன்மிகம் மற்றும் மனிதர்களின் நம்பிக்கைகள் ஆகியவற்றை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மர்மம், பரபரப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் நிறைந்த திரைக்கதையுடன், ரசிகர்களுக்குப் புதிய திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாகவுள்ளது.

‘காந்தாரா’, ‘விருபாக்ஷா’, ‘மங்களவாரம்’ மற்றும் தமிழில் வெளியான ‘மகாராஜா’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். A.J. ஷெட்டி ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொள்கிறார்.

Web Ad 2

தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் இப்படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படத்தின் கூடுதல் விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

படத்தின் கதையில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் குறித்த தகவல்களைப் படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. தெய்வீக மர்மங்களையும் ஆன்மிகத்தையும் மையமாகக் கொண்ட இந்தப் பான் இந்திய திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

‘ஆதி ருத்ரா’ – ஐந்து மொழிகள், ஒரே பிரம்மாண்டத் திரை அனுபவம்!