சினிமாவில் வேலை நேரம்: தீபிகா படுகோன் கருத்துக்கு ராஷ்மிகா ஆதரவு..
ஒவ்வொரு துறையிலும் வேலைநேரம் என்பது வரையறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், சினிமா துறையில் வேலை நேரம் என்பது தற்போது பேசுபொருளாகி வருகிறது.
பாலிவுட்டில் தீபிகா படுகோன் ‘கல்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருந்தார். எட்டு மணி வேலை நேரம் மற்றும் சம்பளம் காரணமாக அப்படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. தற்போதுதான் அவருக்குப் பதில் ஆலியா பட் இணைந்துள்ளார்.
தற்போது வேலை நேரம் தொடர்பாக ராஷ்மிகா மந்தனா தெரிவிக்கையில், ‘தனக்கும் வேலை நேரம் நிர்ணயிக்கப்பட வேண்டும்’ என கூறியுள்ளார். ராஷ்மிகா நடித்த ‘தி கேர்ள் பிரண்ட்’ படம் நவம்பர் 7-ந்தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் புரமோஷனின்போது ராஷ்மிகா கூறுகையில்,
‘நடிகர்கள் மட்டுமல்ல, இயக்குநர்கள் முதல் லைட் மேன் வரை அனைவருக்கும் வேலை நேரத்தை நிர்ணயித்தால் நல்லது. அது அவர்களுக்கு தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட உதவும். இனிமேல் நானும் என் குடும்பத்திற்கு நேரம் செலவிட விரும்புகிறேன். ஒரு தாயான பிறகு அது எப்படி இருக்கும் என்பதை என்னால் கற்பனைகூட செய்ய முடியவில்லை’ என ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதற்கு தீர்வு உருவாகுமோ.?

