ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தின் அப்டேட்ஸ்..

Web Ads

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘ கூலி’ திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தற்போது இதன் படப்பிடிப்பு கேரளாவை தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது, இதனைத் தொடர்ந்து கோவாவில் தொடங்கவுள்ளது.

கோவாவில், சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட சில முக்கிய காட்சிகளை படமாக்க முடிவு செய்திருக்கிறது படக்குழு. ‘ஜெயிலர் 2’ படத்தில் முதல் பாகம் தவிர்த்து, சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். இதில் எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி உள்பட சிலரும் இணைந்துள்ளனர்.

அவர்களது வரிசையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையிலும், கோவாவிலும் படமாக்க உள்ளார்கள்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தின் மனைவியாக கவுரவ கதாபாத்திரத்தில் நடித்த வித்யா பாலன். தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார். இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தாலும், சமீபத்தில் அவருடைய தென்னிந்திய ரீல்ஸ் இணையத்தில் ட்ரெண்ட்டானது குறிப்பிடத்தக்கது.

‘ஜெயிலர்-2’ படத்தை அடுத்து, சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பான குடும்பக்கதையில் ரஜினி நடிக்கவுள்ளார். பின்னர் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ரஜினி-கமல் இணையும் படம் தொடங்கப்படுகிறது என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

actress rashmikas comments on working hours
actress rashmikas comments on working hours