திருமணத்திற்கு பிறகு உடல் எடையை குறைத்த நடிகை மஞ்சிமா மோகன்

‘ஒரு வடக்கன் செல்பி’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘FIR’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘தேவராட்டம்’, ‘சுழல் 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை மஞ்சிமா மோகன்.
திரையுலகில் மீண்டும் ஒரு வலுவான என்ட்ரி கொடுக்க தயாராகி வரும் மஞ்சிமா மோகன், தற்போது தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றியுள்ளார். உடல் எடையை கணிசமாகக் குறைத்து, ஸ்லிம்மாகவும் ஃபிட்டாகவும் மாறியுள்ள அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

மஞ்சிமாவின் இந்த மாஸான மேக்ஓவர் மற்றும் புதிய கெட்டப், அவரது அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
— Manjima Mohan (@mohan_manjima) August 28, 2026