எனது மரியாதையை குறைக்கும் வகையில் போலியாக மார்ஃபிங்: நடிகை கிரண் புகார்..
‘பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்’ என கேட்டுக்கொண்டுள்ளார் கிரண். இது பற்றிய தகவல்கள் காண்போம்..
நடிகை கிரண் வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இருப்பினும் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் இருந்தாலும், மறுபுறம் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.
சப்ஸ்கிரைபர் ஒன்லி பிளான்களை அறிமுகம் செய்து, அவருடைய எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சாட்டிற்காக கட்டணத்தை வசூலித்ததாக தகவல் வெளியானது. அவர் மீது வதந்திகளும், சர்ச்சைகளும், வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அது குறித்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளதாவது,
‘எனது தனி உரிமையையும், மரியாதையையும் குறைக்கும் வகையில் போலியாக மார்ஃபிங் செய்யப்பட்ட ஒரு வீடியோ பரவுகிறது. இது பற்றி சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்’ என கூறியுள்ளார்.
இந்த வீடியோவை பகிர்வது, பதிவிறக்கம் செய்வது அல்லது பிறருக்கு அனுப்புவது தவறானது மற்றும் இந்திய சட்டத்தின்படி குற்றமாகும். அவ்வாறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயலாம். எனவே பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என கிரண் கேட்டுக் கொண்டுள்ளார்.
