பராசக்தி படம் குறித்த அப்டேட் கொடுத்த சுதா கொங்காரா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!
பராசக்தி படம் குறித்து சுதா கொங்காரா கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சுதா கொங்காரா. இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் ரவி மோகன், ஸ்ரீ லீலா, அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்றையும் பகிர்ந்துள்ளார் அதாவது இந்த படத்தின் 40 நாட்களுக்கான காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளதாகவும் தற்போது சிவகார்த்திகேயன் மதராசி படப்பிடிப்பில் இருப்பதால் அவர் வந்த பிறகு பராசக்தி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும் கூறியிருக்கிறார்.
முக்கிய குறிப்பாக பராசக்தி திரைப்படம் விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் மோதும் என நாங்கள் சொல்லவோ அறிவிக்கவோ இல்லை என்றும் ரிலீஸ் முடிவை தயாரிப்பாளர்கள் தான் எடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
