இதுக்கே ஷாக் ஆனா எப்படி? இன்னும் பல விஷயங்கள் இருக்கு.. திரிஷா ஓபன் டாக்..!
இதுக்கே ஷாக் ஆனீங்கன்னா எப்படி இன்னும் பல விஷயங்கள் படத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. இவர் பல்வேறு படங்களில் நடித்த தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளார்.
வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தில் த்ரிஷா நடனமாடிய சுகர் பேபி என்ற பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது. அதில் கமல்ஹாசன் த்ரிஷாவுடன் ரொமான்ஸ் செய்வது போல காட்சிகள் இருந்தது இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து திரிஷா பதில் அளித்துள்ளார் இதுவரை படத்திலிருந்து ஒரு இரண்டு நிமிட காட்சிகளை தான் பார்த்திருக்கிறீர்கள்? அதற்கே இப்படி ஷாக் ஆனால் எப்படி? இன்னும் படத்தில் பல ஷாக்கிங் ஆன விஷயங்கள் இருக்கிறது படத்தைப் பார்த்த பிறகு என் கதாபாத்திரம் குறித்து பேசலாம் என்று கூறியுள்ளார்.
இவர் கூறிய இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரித்து உள்ளது.
இந்த இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
