அஜித் படத்தின் அந்த பாடலுக்காக படத்தை ஐந்து முறை பார்த்தேன்.. சிம்பு ஓபன் டாக்.!!

அஜித் படத்தில் அந்த பாடலுக்காகவே படத்தை ஐந்து முறை பார்த்தேன் என சிம்பு பேசியுள்ளார்.

actor simbu latest speech viral

actor simbu latest speech viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. தற்போது இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கமல்ஹாசன், திரிஷா, அபிராமி ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிற நிலையில் படத்தின் பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிம்பு கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை ஐந்து முறை பார்த்ததாக கூறியிருக்கிறார் மேலும் இந்த காலத்தில் பிடித்த படத்தின் காட்சிகளை எளிதாக கட் செய்து பார்த்து விடுகிறார்கள் அப்போதெல்லாம் அந்த வசதி கிடையாது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் கடைசியாக வரும் என்ன சொல்லப் போகிறாய் என்ற பாடலின் நாதஸ்வர போர்ஷனை காண்பதற்காகவே அந்த படத்தை நான்கு ,ஐந்து முறை இந்த முறை பார்த்ததாக கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor simbu latest speech viral

actor simbu latest speech viral