ஏஸ் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!
ஏஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போதைய இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
ஆறுமுக குமார் இயக்கி தயாரித்த இந்த படத்தில் ருக்மினி வசந்த், யோகி பாபு, பப்லு, திவ்யா பிள்ளை, அவினாஷ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கும் நிலையில் தற்போது முதல் நாளில் உலக அளவில் 1.8 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
