சூர்யா 46 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா? வெளியான அறிவிப்பு இதோ..!
சூர்யா 46 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து சூர்யா 46 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் பூஜை ஹைதராபாத்தில் இன்று நடைபெற்று உள்ளது. சூர்யாவிற்கு ஜோடியாக மமீதா பைஜு நடிக்க இருப்பதாகவும்,வெங்கி அட்லூரி இந்த படத்தை இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் வெங்கி அட்லூரியுடன் இருக்கும் புகைப்படத்துடன் பதிவு வெளியிட்டு உள்ளார்.
அதில் லக்கி பாஸ்கர் மற்றும் வாத்தி என்ற வெற்றிகரமான கூட்டணியான இயக்குனருடன் எனது மூன்றாவது கூட்டணி என்று #சூர்யா46 என்று பதிவிட்டு உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற 30-ஆம் தேதி தொடங்கும் எனவும் தகவல் சொல்லப்படுகிறது.இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
After #LuckyBaskhar , #Vaathi … my third combo with my most successful combination director …. Let’s rock this venky #Venkyatluri … here is #Suriya46 pic.twitter.com/HzgNfzibAb
— G.V.Prakash Kumar (@gvprakash) May 19, 2025