சந்தோஷத்தில் முத்து, மீனா.. பயத்தில் நடுங்கிய ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
முத்து மீனா சந்தோஷத்தில் இருக்க,ரோகினி பயத்தில் நடுங்கியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இன்ஸ்பெக்டர் முத்துவை அரெஸ்ட் பண்ண இழுத்துக் கொண்டு போக கான்ஸ்டபிள் பிரேக் பிடிக்காமல் போன விஷயத்தை இன்ஸ்பெக்டரிடம் சொல்லி விடுகிறார் உடனே ஏன் இதை என்கிட்ட சொல்லல என்று கேட்க அருண் சார் தான் சொல்ல வேணாம்னு சொல்லிட்டாரு என்று சொல்லுகிறார் உடனே இன்ஸ்பெக்டர் அருனிடம் என்னையா இதெல்லாம் உனக்காக இவ்வளவு தூரம் பேசிக்கிட்டு இருக்க நீ இப்படி பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க அருண் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நிற்கிறார்.
உடனே முத்து இப்ப தெரியுதா சார் மேல தப்புன்னு நான் பழி வாங்கறேன்னு சொன்னீங்க அவருதான் என்ன பழி வாங்கி இருக்காரு என்று சொல்ல உடனே மீனா இப்போவாவது நம்புங்க சார் இவர் கார் நிஜமாகவே பிரேக் பிடிக்கல அவரே தான் போய் பசங்க ஆட்டோல மோதிர கூடாதுன்னு திருப்பி இருக்காரு அப்போதான் இவரு வண்டியில மோதிருச்சு என்று சொல்லுகிறார். உடனே இன்ஸ்பெக்டர் அருணுக்கு சஸ்பெண்ட் ஒரு வாரம் கொடுத்துவிட முத்து காரை கொடுத்து விட சொல்லுகின்றனர். பிறகு மீனா கான்ஸ்டபிளுக்கு நன்றி சொல்ல முத்துவிடம் உனக்கு எப்படியாவது கார் வாங்கி கொடுத்தரனும்னு அந்த பொண்ணு தவியா தவிச்சுக்கிட்டு இருந்தது. அந்த பொண்ணோட பிரச்சனையிலேயே ஒரு கர்ப்பிணி பொண்ணுக்கு உதவுச்சு இந்த மாதிரி பொண்ணு கிடைக்கிறதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணும் ஒழுங்கா கோபப்படாமல் சந்தோஷமா வாழுங்க என்று சொல்லி அனுப்புகிறார்.
உடனே வெளியே வந்தவுடன் முத்து காரை கட்டிப்பிடித்து கண் கலங்க மீனா காரை திறந்து உள்ளே உட்கார வைக்கிறார். பிறகு கதவை சாத்த நீயும் என் கூட வா மீனா என்று சொல்லுகிறார் இல்லங்க எனக்கு பைக் இருக்கு என்று சொல்ல நான் செல்வத்தை விட்டு எடுத்துட்டு வர சொல்ற நீ என்கூட வா என்று அழைத்துச் செல்கிறார். பிறகு மீனாவிடம் முத்து கண்கலங்கி பேசுகிறார் எனக்கு கார் போகும்போது கூட கண் கலங்கல மீனா ஆனா நீ அவ்ளோ கஷ்டத்திலே உதவி பண்ணி இருக்கேன் அதை நினைக்கும் போது தான் எனக்கு கண் கலங்கிடுச்சு என்று சொல்லுகிறார். பிறகு முத்து மீனாவிடம் கொஞ்சம் கொண்டுவர கொஞ்ச நேரத்தில் ஆனா இந்த பிரேக் ஒயர் தானா கட் ஆகல யாரோ கட் பண்ணி இருக்காங்க அவங்களுக்கு என்னோட கார் சாவி கையில கிடைச்சிருக்கு யாருன்னு தெரியல என்று சொல்லி விட்டு வீட்டுக்கு வருகின்றனர்.
பிறகு வீட்டில் இருக்கும் அனைவரையும் அழைத்து முத்து வரவைத்து என்னோட லைசென்ஸ் கிடைச்சுருச்சு என்று சொல்லி சந்தோஷமாக சொல்ல மனோஜ் அது எப்படி கிடைத்தது நீதான் போலீஸ் வண்டியை இடிச்சியே என்று கேட்க என் பொண்டாட்டி எல்லாம் சிஐடி வேலையும் பார்த்து எனக்காக வாங்கி கொடுத்துட்டா என்று சொல்லுகிறார் உடனே மீனா உங்க பையன் ரொம்ப நல்லவரு மாமா ஒருத்தவங்க பசின்னு சொன்னா அவங்கள வண்டியில ஏத்திட்டு போய் சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பாரு அது மாதிரி இருக்கிற ஒருத்தருக்கு எப்படி கஷ்டம் வரும் என்று சொல்ல அண்ணாமலை எங்க அம்மா முத்துவ நல்லா தான் வளர்த்திருக்காங்க என்று சொன்ன உடனே விஜயா அப்பனா ரவி மனோஜ் நல்லா வளர்க்கவில்லையா? என்று கேட்க உடனே சுருதி ஒருத்தவங்கள பாராட்டி பேசினா இன்னொருதரை குறை சொல்றாங்கன்னு அர்த்தம் கிடையாது என்று சொல்ல அந்தப் பொண்ணுக்கு புரியறது கூட உனக்கு புரியலையா என்று சொல்லுகிறார். ரவி பிரேக் ஒயர் எப்படி கட் ஆச்சு என்று கேட்க தானா கட் ஆகல வேண்டுமென்றே யாரோ செஞ்சிருக்காங்க என்று சொல்லுகிறார். என்னடா சொல்ற நம்ம வீட்ல இருந்து எப்படி செஞ்சி இருப்பாங்க என்று அண்ணாமலை கேட்க ஆமாப்பா நான் கார் சாவி யார்கிட்டயும் தரமாட்டேன் அதே மாதிரி நைட்டு வீட்டில் வந்து நிறுத்துற வரைக்கும் பிரேக் நல்லாதான் புடிச்சது அன்னைக்கு நைட்டு தான் யாரோ பிரேக் ஆயில் ஒயர் கட் பண்ணி இருக்காங்க என்று சொல்லுகிறார்.
ஸ்ருதி ரவி செஞ்சிருக்க மாட்டாங்க என்று சொல்லிவிட்டு, முத்து விஜயாவை பார்க்க விஜயா இவன் என்ன பாக்குறான் இவனை எனக்கு பிடிக்காது தான் ஆனா அதுக்காக பெத்த அம்மாவை புள்ளைய கொல்லனும்னுல்லா நினைக்க மாட்டா என்று சொல்ல முத்து உடனே விஜயாவிடம் நீங்கதான் பண்ணி இருக்கீங்க என்று நான் எந்த காலத்திலும் நம்ப மாட்டேன் நீங்க அப்படி பண்ணி இருக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் என்று சொல்ல விஜயாவின் முகம் மாறுகிறது. அப்போ வேற யார் பண்ணி இருப்பா என்று ரவி கேட்க முத்து என்ன சொல்லுகிறார்? ரோகிணியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
