பாக்கியா கேட்ட விஷயம், கோபி சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
பாக்கியா கேட்ட கேள்விக்கு கோபி பதில் சொல்லியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வெளியில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி பாக்யாவின் ஹோட்டலுக்கு வந்து சாப்பிடுகிறார் பாக்யாவுடன் கொஞ்சம் பேச வேண்டும் என்று சொல்ல என்ன விஷயம் என்று கேட்கிறார் நீ பிஸ்னஸ்ல ஒரு தப்பு பண்ணிட்டேன் பாக்கியா அவர்கிட்ட இருந்து வாங்கின பணத்துல நீ பெருசா ஒரு ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணி அதுல வர வருமானத்துல கடன் அடைச்சு இருக்கலாம் என்று சொல்ல அதற்கு நான் எம்பிஏ படிக்கலையே என் அறிவுக்கு அது எட்டல நான் கடனை அடைக்க வேண்டும் என்று மட்டும் தான் யோசிச்சேன் என்று சொல்ல, உனக்கு எப்ப பண உதவி வேணும்னாலும் என்கிட்ட கேளு பாக்கியம் தயங்காதே என்று சொல்ல உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் என்று சொல்லுகிறார்.
என்ன விஷயம் சொல்லு என்று கேட்க நீங்க எழில் மற்றும் செழியன் ரெண்டு பேரும் தனித்தனியாக சந்தோஷமா வாழ்ந்து கொண்டு இருந்தாங்க அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க என்று சொல்ல இப்ப என்ன பிரச்சனையா ஆயிடுச்சா என்று கேட்க இல்ல இதுக்கு முன்னாடி சின்ன சின்ன பிரச்சனையை வந்தது அவங்களே சமாளிச்சுக்கிட்டாங்க நானும் சமாளிச்சேன் ஆனா உங்க அம்மா சும்மா இருக்க மாட்டாங்க,அவங்க வாயும் சும்மா இருக்காது, நான் ஏற்கனவே பல பிரச்சனைகளை தாண்டி வந்துட்டேன் திரும்பவும் என்னை எதுவும் பேச வேண்டாம் மட்டும் சொல்லுங்க என் விஷயத்துல தலையிட வேண்டாம்னு மட்டும் சொல்லுங்க அது போதும் என்று சொல்ல சரி பாக்யா நானும் அம்மாவும் இன்னிக்கி இனியாவ பார்க்க போறோம் போயிட்டு போறப்போ இல்ல வரப்போவோ அவங்க கிட்ட நான் பொறுமையா சொல்றேன் என என்ன சொல்லுகிறார்.
மறுபக்கம் சுதாகர் வீட்டில் வேலை செய்பவரிடம் சுதாகர் மனைவி நேத்து செஞ்சது இனியாவுக்கு பிடிக்கல அவர் சரியாகவே சாப்பிடல அதனால அவளுக்கு புடிச்சத கேட்டு செய்யுங்க என்று சொல்லிக் கொண்டிருக்க ஈஸ்வரியும் கோபியும் இதை பார்த்து சந்தோஷப்படுகின்றனர் உடனே அவர்களை வரவேற்று உட்கார வைக்கின்றனர். கொஞ்ச நேரம் பேசிவிட இனியாவிடம் இருவரும் தனியாக ரூமில் பேசுகின்றனர். நீ எப்படி இருக்க இனியா சந்தோஷமா இருக்கியா என்றெல்லாம் கேட்க நான் சந்தோஷமா தான் இருக்கேன் என்று சொல்ல ஈஸ்வரி உங்க அம்மாவோட ஹோட்டல்ல போய் பார்த்தியா என்று கேட்கிறார். பார்த்தேன் ரொம்ப கஷ்டமா இருக்கு பாட்டி என்னால தான் அம்மா இவ்வளவு கஷ்டப்படுறாங்க என்னால தான் எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிறாங்க என்று சொல்லுகிறார்.
ஒன்னை இழக்கும் போது இன்னொன்று பெருசா கிடைச்சா சந்தோஷம்தானே அந்த ரெஸ்டாரண்டுக்கு பதிலா நீ இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வது சந்தோஷமா இல்லையா என்று கேட்க இருந்தாலும் எனக்கு அம்மாவும் நினைச்சா கஷ்டமா தான் இருக்கு என்று சொல்லுகிறார். பிறகு இதையெல்லாம் நெனச்சி கஷ்டப்படாத நீ உன் வாழ்க்கையை சந்தோஷமா வாழு என்று சொல்லுகிறார். மறுபக்கம் ஹோட்டலில் பாக்கியா வேலை பார்த்துக் கொண்டிருக்க செல்வியின் மகன் போஸ்டர் உடன் வருகிறார் அதில் மது அருந்துபவர்கள் உள்ளே வரக்கூடாது என்பது போல இருக்க இப்பவே ஒட்டிடவா என்று கேட்க இல்லை எல்லாம் சாப்பிட்டு முடிக்கட்டும் அப்புறம் ஒட்டிக்கலாம் என்று சொல்லுகிறார் பாக்யா. உடனே செல்வியிடம் கேளும்மா என்று சொல்ல நான் எதுக்கு கேக்கணும் நீயே கேளு அக்கா விருப்பப்பட்டா சேத்துக்கட்டும் இல்லனா விட்டுவிடு என்று சொல்லுகிறார் உடனே ஆகாஷ் பாக்யாவிடம் நான் படிக்கிறதுக்கு பீஸ் கட்டணும் அதுக்காக வெளியே நிறைய பார்ட் டைம் ஜாப் தேடினால் எதுவுமே கிடைக்கல இதுக்கு மேலயும் கிடைக்கிற மாதிரி தெரியல அதனால நீங்க தப்பா நினைச்சுக்கலனா உங்களோட ஹோட்டல்ல வேலை பார்க்கவா என்று கேட்க பாக்யா உன்னால படிச்சிட்டு இதை பார்க்க முடியுமா என்று கேட்க கண்டிப்பா பார்க்க முடியும் ஆன்ட்டி என்னால முடியும் என்று சராசரி சேர்ந்து கோ என்று சொல்ல நான் இன்னைக்கே சேர்ந்துகவா என்று கேட்கிறார் சரி சேர்ந்து கோ என்று சொன்னவுடன் ஆகாஷ் வேலையை பார்க்க ஆரம்பிக்கிறார்.
உடனே அந்த ஏரியா கவுன்சிலர் இரண்டு பேருடன் வெளியில் ஹோட்டலை பார்த்து நின்று பேசிவிட்டு நிற்க செல்வி இன்னைக்கும் வருவாங்களா அக்கா என்று கேட்க கொஞ்ச நேரத்தில் நகர்ந்து சென்று விடுகின்றனர் கண்டிப்பா வருவாங்க ஆனா இன்னைக்கு நான் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் பிரச்சனை வரும் ஆனா இது இப்படியே விடக்கூடாது என்று முடிவெடுக்கின்றனர். மறுபக்கம் கோபியும் ஈஸ்வரியிடம் பாக்யா விஷயத்தை கொஞ்ச நாளைக்கு எதுவும் பேசாம இருங்க என்று சொல்ல என்னோட அருமை உங்களுக்கு இப்ப தெரியாது என்று சொல்லுகிறார்.
பிறகு பாக்கியா என்ன சொல்லுகிறார்? அந்த கவுன்சிலர் திரும்ப வருகிறாரா? என்ன செய்யப் போகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
