Pushpa 2

விஷ்ணுவர்தன் இயக்கிய ‘நேசிப்பாயா’ படத்தின் கதைக்களம் குறித்து சரத்குமார்..

மறைந்த நடிகர் முரளியின் இளையமகன் நடித்த ‘நேசிப்பாயா’ படத்தின் கதைச்சூழல் பற்றி பார்ப்போம்..

அஜித் நடிப்பில் பில்லா, ஆர்யா நடிப்பில் சர்வம் போன்ற படங்களை இயக்கிய கவனம் ஈர்த்த விஷ்ணுவர்தன், தற்போது ‘நேசிப்பாயா’ படத்தை இயக்கி முடித்து புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

இப்படத்திற்கு யுவன் இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வரும் 14-ம் தேதி பொங்கலையொட்டி இப்படம் ரிலீஸாகவுள்ளது.

படத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி, இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர், மற்றும் சரத்குமார், குஷ்பூ உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் கதைக்களம் குறித்து சரத்குமார் தெரிவித்ததாவது:

இந்த படத்தில, அதிதி ஷங்கரை கடத்தி சுவிட்சர்லாந்து, அசர்பைஜான் உள்ளிட்ட நாடுகளுக்கு நான் கொண்டு செல்கிறேன். அவரை நான் கடத்திச் செல்வதற்கு என்ன காரணம் என்பதை படத்தில் பாருங்கள். இந்த படத்தில் எனது கேரக்டர் சிறுது நேரமே வந்தாலும் சுவாரஸ்யமாக இருக்கும்.

படத்தில், என்னுடன் குஷ்புவும் இணைந்து நடித்துள்ளார். இன்ரஸ்டிங்கான காட்சிகளை நீங்கள் ரசிப்பீர்கள். படத்தில் நடித்திருக்கும் ஆகாஷ் முரளிக்கும் இவரது அண்ணன் அதர்வாவுக்கும் அப்பா (மறைந்த நடிகர் முரளி) மேலிருந்து இவர்களை ஆசீர்வாதம் செய்வார்’ என நெகிழ்ச்சியுடன் சரத்குமார் குறிப்பிட்டார்.

‘நேசிப்பாயா’ படம், அனைவரும் நேசிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

actor sarathkumar revealed the story of nesippaya movie
actor sarathkumar revealed the story of nesippaya movie