மிருணாள் தாக்குருடன் தனுஷ் காதல்?: வைரலாகும் நிகழ்வு..

Web Ads

தனுஷ்-அமல்பால் இருவரும் காதலித்து வருவதாக முன்னதாக பரபரப்பாக செய்திகள் வெளியாகி நீர்த்துப்போனது தெரிந்ததே. இந்நிலையில், தற்போது மிருணாள் தாக்குரை தனுஷ் காதலித்து வருவதாக மும்பை ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்தி நடிகையான மிருணாள் தாக்குர், தமிழில் நேரடி படங்களில் நடிக்கவில்லை என்றாலும், மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான ‘சீதாராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய படங்களின் மூலம் தமிழிலும் அறியப்பட்டார்.

இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர், கடந்த ஆக.1-ம் தேதி மும்பையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பார்ட்டியில் பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். தனுஷும் கலந்துகொண்டார். அவருடைய கையை பிடித்துக் கொண்டு மிருணாள் தாக்குர் அவரிடம் ஏதோ சொல்வது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘அவர்கள் ‘டேட்டிங்’கில் இருப்பது உண்மைதான் என்றும் அதை வெளிப்படையாக அதிகாரப்பூர்வமாக்கும் திட்டம் அவர்களிடம் இல்லை’ என்றும் மும்பை ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இதுதொடர்பான செய்திகளுக்கு, இருவரும் உரிய பதில் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

actor dhanush in love with actress mrunal thakur
actor dhanush in love with actress mrunal thakur