Aadai Movie Review : Amala Paul's Aadai Best or Worst? | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
விஜி சுப்பிரமணியம் தயாரிப்பில் A. ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால், விஜே ரம்யா மற்றும் பலர் நடிப்பில் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆடை.

படத்தின் கதைக்களம் :

ஒரு தொலைக்காட்சி சேனலில் பணி புரிந்து வரும் அமலாபால் எதற்கெடுத்தாலும் பெட் கட்டுவதை பழக்கமாக வைத்து கொண்டிருக்கின்றனர். இவரும் இவருடைய கூட்டணியும் இணைந்து பிராங்க் ஷோ செய்யும் வேலையை செய்து வருகின்றனர்.

இந்த பிராங்க் ஷோவால் அமலா பாலுக்கு ஏற்படும் பிரச்சனை என்ன? ஏன் ஆடை இல்லாமல் நிர்வாணமாக அலைந்து கொண்டிருக்கிறார் என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

அமலா பால், வ.ஜே ரம்யாவின் நடிப்பு அற்புதம். அமலாபால் பாதி படம் முழுவதும் ஆடை இல்லாமல் துணிந்து நடித்திருப்பது சவாலான ஒன்று தான்.

தொழில்நுட்பம் :

இசை :

பிரதீப் குமாரின் பின்னணி இசையும் ஊர்க்காவின் பேண்ட் இசையும் படத்திற்கு பலம் சேர்ந்துள்ளன.

ஒளிப்பதிவு :

விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவை பாராட்டியே ஆக வேண்டும். ஆடை இல்லாமல் ஆபாசம் தெரியாத அளவிற்கு படமாக்குவது கடினமான ஒன்று. அதனை சிறப்பாக செய்துள்ளார் ஒளிப்பதிவாளர்.

எடிட்டிங் :

ஷாபிக் முகமது அலியின் எடிட்டிங் ஓகே. இரண்டாம் பாதியில் படத்தின் நேரத்தை இன்னும் குறைத்திருக்கலாம்.

இயக்கம் :

ரத்ன குமாரின் வித்தியாசமான கதைக்களத்தை பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் இரண்டாம் பாதியில் நேரத்தை கொஞ்சம் குறைத்திருந்தால் படம் போரில்லாமல் இருந்திருக்கும். படத்தின் சமூகத்திற்கு தேவையான கருத்து இருப்பது கூடுதல் சிறப்பு.

தம்ப்ஸ் அப் :

1. அமலா பாலின் துணிச்சலான நடிப்பு

2. ரம்யாவின் நடிப்பு

3. படத்தின் குறைந்த அளவே காமெடி இருந்தாலும் அவை சிரிக்கும் வகையில் அமைந்திருப்பது.

4. ஒளிப்பதிவு

5. கிளைமாக்ஸ்

தம்ப்ஸ் டவுன் :

1. இரண்டாம் பாதியில் நேரத்தை குறைத்திருக்கலாம்.

2. ரம்யா படத்தின் பாதிக்கு மேல் என்னவானார் என்றே தெரியவில்லை.

3. அமலாபாலின் அம்மா போலீசிற்கு சென்றார், ஆனால் அதன் பின் என்ன நடந்தது என தெரியவில்லை.

4.  திரைக்கதையை வேகப்படுத்தி இருக்கலாம்.

REVIEW OVERVIEW
ஆடை விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
aadai-movie-reviewமொத்தத்தில் ஆடை இல்லை என்றாலும் படத்தில் ஆபாசம் இல்லை.. பிராங்க் ஷோ செய்பவர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்.