நடிகைகளை விமர்சிக்கவே ஒரு கூட்டம் காத்திருக்கிறது – மிருணாள் தாகூர்

Web Ads

நடிகர்களைக் காட்டிலும் நடிகைகளே அதிக அளவில் விமர்சனங்களுக்கு உள்ளாகிறார்கள். நடிகைகளை விமர்சிப்பதற்காகவே ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் எப்போது தவறு செய்வார்கள் எனக் கண்கொத்திப் பாம்பாகக் காத்திருக்கிறார்கள். என்மீது வந்த விமர்சனங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. காதல், டேட்டிங் என பல்வேறு விஷயங்களைப் பற்றி என்னை விமர்சித்துப் பேசினார்கள்.

ஆனால், நான் நதியைப் போல என் பாதையில் தொடர்ந்து பயணிக்கிறேன். நீங்கள் கற்களை வீசினாலும், பூக்களை வீசினாலும், நான் என் வேலையைப் பார்த்துக்கொண்டே செல்வேன். எல்லாவற்றையும் மறக்கவும், மன்னிக்கவும், விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் கடந்து செல்லவும் சினிமா எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது.

Web Ad 2

எனவே, எத்தனை விமர்சனங்கள் அம்புகளைப் போல என்னை நோக்கிப் பாய்ந்தாலும், அவற்றைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை (I don’t care) என நடிகை மிருணாள் தாகூர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.