நடிகர் துல்கர் சல்மானின் ஏஒடி படத்தின் டீசர்!

Web Ads

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏஒடி (AOT)’ திரைப்படம், அவரது பான் இந்திய ரசிகர் வட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் படைப்பாக உருவாகி வருகிறது.

தனித்துவமான கதை சொல்லும் பாணிக்குப் பெயர் பெற்ற இயக்குநர் பவன் சாதினேனி இப்படத்தை இயக்கியுள்ளார். கீதா ஆர்ட்ஸ் (Geetha Arts) மற்றும் ஸ்வப்னா சினிமா (Swapna Cinema) வழங்கும் இப்படத்தை, லைட்பாக்ஸ் மீடியா (Lightbox Media) சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சாத்விகா வீரவல்லி இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். எளிமையான தோற்றத்துடன், பெரிய கனவுகளையும் லட்சியங்களையும் கொண்ட பெண்ணாக அவர் நடித்துள்ள கதாபாத்திரம் படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் கொண்ட துல்கர் சல்மான், கதாநாயகியை மையமாகக் கொண்ட கதையாக இருந்தாலும், அதன் வலுவான உள்ளடக்கத்துக்காக இப்படத்தில் நடித்துள்ளார். ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு தனிப்பட்ட கதாபாத்திரத்தைத் தாண்டி, ஒட்டுமொத்தக் கதையும் முக்கியம் என்பதை அவரது தேர்வு உணர்த்துகிறது.

Web Ad 2

ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் கிராமப்புற வாழ்க்கையின் இயல்பையும் அழகையும் திரையில் அழகாகப் பதிவு செய்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் தனது பின்னணி இசையின் மூலம் படத்தின் உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கு வலுசேர்த்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளர் ஸ்வேதா சாபு சிரிலின் கலைப்பணியும் படத்தின் காட்சியமைப்பை மேலும் மெருகேற்றியுள்ளது.

ஏற்கெனவே வெளியாகியுள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக இப்படம் வெளியாகவுள்ளது.

‘மகாநதி’, ‘சீதா ராமம்’, ‘கல்கி 2898 AD’ உள்ளிட்ட படங்களுடன் தொடர்புடைய ஸ்வப்னா சினிமா, மீண்டும் துல்கர் சல்மானுடன் இணைந்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும் இப்படத்தை வழங்குவதால், ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘AOT’ திரைப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் துல்கர் சல்மானின் திரைப்பயணத்தில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க படைப்பாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.