பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக ரீ ரிலீஸ் செய்யப் போகும் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் திரைப்படம்..!

Web Ads

கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்று ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர்.

nayagan movie re release update viral
nayagan movie re release update viral

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன் இவரது நடிப்பில் 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது மட்டுமில்லாமல் இன்றுவரை இந்த திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் ஜனகராஜ், கார்த்திகா ,நாசர், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, விஜயன், ராஜ கிருஷ்ணமூர்த்தி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் மாதம் ஆறாம் தேதி நாயகன் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த தகவல் கமல்ஹாசன் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

nayagan movie re release update viral
nayagan movie re release update viral