இந்திய இராணுவத்திற்கு, ஒரு ராயல் சல்யூட்: தவெக லீடர் விஜய்..

Web Ads

மே 7-ந்தேதி அதிகாலை, இந்திய விமானப்படை, பாகிஸ்தான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது. ஏப்ரல் 22-ந்தேதி காஷ்மீரில் உள்ள பபல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிட்டுள்ளார். ராணுவத்தின் இந்த நடவடிக்கையை நாடே கொண்டாடுகிறது.

பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து துல்லியமாக வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த மின்னல் வேகத் தாக்குதலால் பயங்கரவாதிகள் நிலைகுலைந்துள்ளனர். பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 9 இடங்களில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதனால், நாடே இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறது. குறிப்பாக திரைப் பிரபலங்களும் இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கையை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அவ்வகையில், நடிகராகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக உள்ள விஜய், ஆபரேஷன் சிந்தூரை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில், ‘இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

vijay royal salute to indian army
vijay royal salute to indian army