Web Ad 2

ஒரே படத்தில் ஹீரோ & வில்லனாக நடிக்கிறார் சூரி..

Web Ads

சூரி நடிக்கும் ‘மண்டாடி’ படத்தின் தகவல்கள் காண்போம்..

நடிகர் சூரி, கதையின் நாயகனாக நடித்த ‘கொட்டுக்காளி’ படம் சர்வதேச அளவில் பல திரைப்பட விழாக்களில் கலந்து கவனம் ஈர்த்தது. இதைத்தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கிய ‘கருடன்’ படம் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்த சூரி, இதுவரை நாயகனாக நடித்த 3 படங்களுமே வெற்றி பெற்றன.

தற்போது ‘மாமன்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 16-ந்தேதி ரிலீஸாக உள்ளது மேலும், சூரி நாயகனாக நடித்துள்ள மற்றொரு திரைப்படம் ‘மண்டாடி’ இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். ‘விடுதலை’ படத்தை தயாரித்த எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்பட பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றது.

பாய்மரப் படகுப் போட்டியை மையமாக வைத்து உருவாகும் இப்படம், ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி உள்ளது. இதில் தமிழில் ஹீரோவாக நடித்துள்ள சூரி, தெலுங்கில் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் தமிழில் வில்லனாக நடித்துள்ள தெலுங்கு நடிகர் சுஹாஸ், தெலுங்கில் ஹீரோவாக நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் மூலம் நடிகர் சூரி தெலுங்கில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor soori in upcoming film mandaadi update
actor soori in upcoming film mandaadi update