இந்த ஆண்டில் வெளியாகி முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய ஐந்து தமிழ் திரைப்படங்கள்..!
இந்த ஆண்டில் வெளியாகி முதல் நாள் வசூலில் தூள் கிளப்பிய ஐந்து படங்கள் குறித்து பார்க்கலாம்.

5 Tamil movies released this year with first day collection
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் என்றாலே ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர் இது மட்டும் இல்லாமல் பெரிய படங்கள் வெளியாகும் போது அதன் வெற்றியை படத்தின் வசூலே நிர்ணயித்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு தொடங்கி சில மாதங்களாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டில் வெளியாகி முதல் நாள் வசூலில் தூள் கிளப்பிய ஐந்து படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலிடத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் 28 கோடி வசூல் செய்துள்ளது.
விடாமுயற்சி திரைப்படம் 25.5 கோடி வசூல் செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் 14 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் முதல் நாளில் 5.25 கோடி வசூல் செய்து நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
விஷால் நடிப்பில் வெளியான மதகஜராஜா திரைப்படம் 3.20 கோடி வசூல் செய்து ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த ஐந்து திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

5 Tamil movies released this year with first day collection
