குடும்பத்துடன் ‘ராமாயணா’ படம் பார்த்த நடிகர் யாஷ்!

நமித் மல்ஹோத்ராவின் பிரம்மாண்ட படைப்பான ‘ராமாயணா’ திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்டத் திரையிடல், நடிகர் யஷ் குடும்பத்திற்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்தச் சிறப்புத் திரையிடலில், நடிகர் யஷ் மற்றும் ராதிகா பண்டித் தம்பதியின் குழந்தைகளான ஐரா மற்றும் யதர்வ் கலந்துகொண்டு படத்தைப் பார்த்துள்ளனர். ஏழு வயதாகும் ஐராவுக்கும், அக்டோபர் 30ஆம் தேதி தனது ஏழாவது பிறந்தநாளைக் கொண்டாடிய யதர்வுக்கும் இந்தத் திரையிடல் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஒரு சிறப்பான தருணமாக அமைந்துள்ளது.
நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் நிறுவனத்துடன் இணைந்து, நடிகர் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனமும் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் யஷ் நடித்துள்ளார். அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படும் இந்தப் பிரம்மாண்டப் படைப்பை, அவரது குழந்தைகளும் திரையில் கண்டிருப்பது குடும்பத்தினருக்கு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது.
இதில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம், யஷ் மற்றும் ராதிகா தம்பதியின் குழந்தைகளான ஐரா, யதர்வ் ஆகியோரின் பெயர்களுக்குப் பின்னால் உள்ள அர்த்தம். ஐரா என்ற பெயர் மகாலட்சுமியின் மற்றொரு பெயரான ஐராவதியிலிருந்து பெறப்பட்டது. யதர்வ் என்ற பெயருக்கு ‘முழுமையானவன்’ என்று பொருள். மேலும், யஷ், ராதிகா மற்றும் ஐரா ஆகிய மூவரின் பெயர்களையும் இணைத்தே யதர்வ் என்ற பெயரைத் தேர்வு செய்ததாகத் தம்பதி தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ‘ராமாயணா’ திரைப்படம் யஷ் குடும்பத்தின் நினைவுகளில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளதுடன், இந்த இதிகாசத்திற்கும் அவரது குடும்பத்திற்கும் இடையே அழகான உணர்வுப்பூர்வமான தொடர்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ராமாயணா’ திரைப்படம் நவம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்கியுள்ளன.
