இதோ இன்னொரு திரிஷா: சூர்யா-தனுஷ்-விஷ்ணு விஷால் என விரும்பும் இளம்நாயகி..

Web Ads

இளம் வரவு, புது உறவு வசீகரிக்கும் தானே.! அதாவது திரிஷா-2 பற்றிப் பார்ப்போம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படம் வருகிற மே மாதம்-1ந் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படம், வெற்றிமாறனின் வாடிவாசல் படம் மற்றும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படமும் நடிகர் சூர்யா கைவசம் உள்ளது.

இந்நிலையில், நடிகர்கள் சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோரின் படங்களில் ஹீரோயினாக நடிக்க 23 வயது இளம்நாயகி மமிதா பைஜு கமிட் ஆகி வருகிறார்.

மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ படம் மூலம் பிரபலமான மமிதா, தமிழில் ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக ‘ரெபல்’ படத்தில் நடித்தார். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுதவிர விஷ்ணு விஷால் ஜோடியாக ‘இரண்டு வானம்’ படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், ‘போர்த்தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு; வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகவும் மமிதா விரும்பப்பட்டு உள்ளார்.

இச்சூழலில், திரையுலகில் மமிதாவை திரிஷா-2 என இணையவாசிகள் ஆருடம் கணித்து வருகின்றனர்.

mamitha baiju pair up with suriya and dhanush next movie
mamitha baiju pair up with suriya and dhanush next movie