Viswasam Report

Viswasam Report : பாகுபலி 2 படத்திற்கு பிறகு விநியோகிஸ்தர்களுக்கு அதிக லாபம் கொடுத்த படம் விஸ்வாசம் தான் என பலரும் கூறி வருகின்றனர்.

தல அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் விஸ்வாசம். கடந்த ஜனவரி 10-ம் தேதி பேட்ட, விஸ்வாசம் என இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசானது.

பேட்டையை விட விஸ்வாசம் வசூல் அதிகமா? – வைரலாகும் விநியோகிஸ்தரின் வீடியோ.!

25 நாட்களை கடந்து இரண்டு படங்களுமே பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது விஸ்வாசம் வசூல் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது பாகுபலி 2 படத்திற்கு பிறகு விநியோகிஸ்தர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் அதிக லாபத்தை கொடுத்த படம் என்றால் அது விஸ்வாசம் தான் என கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

இதுவரை இப்படம் ரூ 16 கோடிக்கும் அதிகமாக லாபம் கொடுத்துள்ளதாம். தொடர்ந்து பல திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருவதால் இந்த லாபத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.