Viswasam

Viswasam 50th Day : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த விஸ்வாசம் திரைப்படம் 50-வது நாளை தாண்டி வெற்றிநடை போட்டு வருகிறது.

நேற்று இப்படத்தின் 50-வது நாள் கொண்டாட்டம் பல இடங்களில் நடைபெற்றது. குறிப்பாக சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களில் ஒன்றான ரோகினி தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றது.

இதெல்லாம் ஒரு வேலையா? விஜய் ரசிகர்களை எச்சரித்த தளபதி 63 பிரபலம்.!

இந்த கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் தியேட்டர் ஸ்கிரீனை சேதப்படுத்தியுள்ளனர். இதனை புகைப்படம் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்த திரையரங்க உரிமையாளர்.

மேலும் தியேட்டர் பொருட்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தும் வரை இனி ஸ்பெஷல் ஷோ கிடையாது எனவும் அறிவித்துள்ளார்.

இதே ரோகினி தியேட்டரில் சர்கார் படத்தின் கொண்டாட்டத்தின் போது விஜய் ரசிகர்களும் தியேட்டர் நிர்வாகத்திற்கு சேதத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.