Thalapathy 63

Lyricist Vivek : இதெல்லாம் ஒரு வேலையா? நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துங்கள் என விஜய் ரசிகர்களை எச்சரித்து அறிவுரை கூறியுள்ளார் விவேக்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு ரஹ்மான் இசையமைக்க பாடலாசிரியர் விவேக் தான் பாடல்களை எழுதியுள்ளார். மெர்சல் படத்திற்காக இவர் எழுதி இருந்த ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் செம ஹிட்டடித்து இருந்தது.

மேலும் விஜய் ரசிகர்களிடம் எப்போதும் ட்விட்டரில் பேசி வருவதால் இவருக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி விட்டது.

இந்நிலையில் தற்போது விஜய் ரசிகர்கள் விவேக்கின் பிறந்த நாளுக்கு இன்னும் 50 நாட்கள் உள்ள நிலையில் #50DaysToGoForLyricistVivekAnnaBday என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்துள்ளனர்.

இதனை பார்த்த விவேக், இதை உடனே நிறுத்துங்கள். உங்களது நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்துங்கள் என கூறி அறிவுரை வழங்கியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.