Vijay Sethupathi to act in Viswaasam Banner : Kollywood | Tamil Cinema | Thala Ajith | Viswasam | Vijay Sethupathi | Cinema

Vijay Sethupathi to act in Viswaasam Banner :

பல படங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி அடுத்ததாக இன்னொரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். இப்படத்தை விவேகம், விஸ்வாசம் படங்களை தயாரித்த சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சினிமா கனவுகளோடு சென்னையை நோக்கி படையெடுக்கும் இளைஞர்களில் பலரும் ஒரு கட்டத்தில், வறுமையுடன் போராட முடியாமல் சொந்த ஊருக்கே திரும்பி போக, வெகு சிலர் மட்டுமே திறமையை நம்பி போராடி வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள்.

பொன்னியின் செல்வனையும் தாண்டி கீர்த்திக்கும் மணிரத்னத்துக்குமான தொடர்பு இதோ!

அப்படி தன் வாழ்க்கையையே போராட்டமாய் கொண்டு, மக்களில் ஒருவனாக இருந்து இன்று மக்கள் செல்வனாக மாறியிருப்பவர் விஜய் சேதுபதி.

தெலுங்கில் ஏற்கனவே சிரஞ்சீவி நடிக்கும் சேரா நரசிம்ம ரெட்டி படத்தில் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதுபோக தற்போது இன்னொரு தெலுங்கு படத்தில் இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படி பல படங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி அடுத்ததாக இன்னொரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

இப்படத்தை விவேகம், விஸ்வாசம் படங்களை தயாரித்த சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.