Keerthy Suresh in Maniratnam Title : Ponniyin Selvan | Chiyaan Vikram | Kollywood | Tamil Cinema | Jayam Ravi | Karthi | Kollywood

Keerthy Suresh in Maniratnam Title :

இப்போ பாலிவுட், டோலிவுட்னு முன்னணி ஹீரோயினா கீர்த்தி சுரேஷ் வலம் வந்திட்டு இருக்காங்க. இதில் தெலுங்கில் இவர் நடிக்கும் புதிய படத்திற்கு சகி என பெயர் வைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில விக்ரம் பிரபு ஜோடியா இது என்ன மாயம் படம் மூலமா அறிமுகமானவங்க கீர்த்தி சுரேஷ். முதல் படம் தோல்விய தழுவினாலும் அடுத்து வெளியான ரஜினி முருகன் இவங்களுக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்துச்சு.

என்.ஜி.கே குறித்த சூப்பர் அப்டேட்டை சொன்ன செல்வராகவன் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

தொடர்ந்து தொடரி, பைரவான்னு முன்னணி நடிகர்களோட நடிச்ச கீர்த்தி சுரேஷ் ஒரேடியா தமிழ் சினிமாவோட முன்னணி நடிகையா உயர்ந்தாங்க.

குறிப்பா போன வருஷம் வெளியான நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷோட கேரியர்ல மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்துச்சு.

அதுவரை ஹீரோவாட சேர்ந்து டூயட் பாடுற வேடங்கள்ல மட்டுமே நடிச்சிட்டு வந்த கீர்த்தி, அதுக்கப்புறம் நல்ல கனமான கதைகளை தேர்வு செஞ்சு நடிக்கத் தொடங்கினாங்க.

அந்த வகையில இப்போ பாலிவுட், டோலிவுட்னு முன்னணி ஹீரோயினா கீர்த்தி சுரேஷ் வலம் வந்திட்டு இருக்காங்க. இதில் தெலுங்கில் இவர் நடிக்கும் புதிய படத்திற்கு சகி என பெயர் வைத்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படம் தெலுங்கில் சகி எனும் பெயரில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோக மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனிலும் கீர்த்தி நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.