NGK Background Score Work Started : Sai Pallavi | Suriya | Selvaraghavan | Yuvan Shankar Raja | Rakul Preet Singh | Kollywood

NGK Background Score Work Started :

இப்படத்தின் பின்னணி இசைக்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக இயக்குநர் செல்வராகவன் தற்போது தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும்,

முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Thala 60: First Mass Update Gets Released – Cheering Ajith Fans…!

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தினம் தினம் ரிசர்வேஷனுக்காக சூர்யாவின் ரசிகர்கள் திரையரங்குகளை படையெடுக்கிறார்களாம்.

இது ஒருபக்கம் இருக்க இப்படத்தின் பின்னணி இசைக்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக இயக்குநர் செல்வராகவன் தற்போது தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.