சிம்புவை தொடர்ந்து, ரஜினியுடன் இணைகிறார் விஜய் சேதுபதி..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில், பிற மொழி பிரபலங்களான மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர். தமன்னா ‘காவாலா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபீஸில் ரூ.600 கோடி வசூலை குவித்து சாதனை படைத்தது. ஜெயிலரின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இதன் 2-ம் பாக பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குநர் நெல்சன்.
முதல் பாகத்தில் நடித்த பலரும் 2-வது பாகத்தில் நடித்து வருகின்றனர். அவ்வகையில் சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் மற்றும் சந்தானம் ஆகியோரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கின்றனர். அத்துடன் வித்யா பாலன், மேக்னாராஜ் ஆகியோரும் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜய் சேதுபதியும் இப்படத்தில் இணைந்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது ‘ஜெயிலர்-2 படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடந்து வரும் நிலையில், விஜய் சேதுபதி ஷுட்டிங்கில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரும் ஒரு முக்கியமான ரோலில் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரிலீசான ‘பேட்ட’ படத்தில் ரஜினியுடன் இணைந்தார். அப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது, இரண்டாவது முறையாக ரஜினியுடன் விஜய் சேதுபதி கூட்டணி அமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் முக்கியமான ரோலில் நடிப்பதற்கு கமிட் ஆகி இருக்கிறார். இதன் மூலமாக ‘செக்க சிவந்த வானம்’ படத்துக்கு பிறகு, 2-வது முறையாக சிம்புவுடன் இணைந்துள்ளார் விஜய் சேதுபதி.

