சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலுக்கு காரணம் என்ன என சீக்ரெட்டை உடைத்துள்ளார் விஜய் சேதுபதி.
Vijay Sethupathi About Salt and pepper Look : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தொடர்ந்து விதவிதமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவர் தற்போது தளபதி விஜய்க்கு வில்லனாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
மேலும் லாபம், கடைசி விவசாயி, துக்ளக் தர்பார் என அரை டஜன் கணக்கில் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் சமீபத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி இருந்தது.
இதற்கான காரணம் என்ன என்பதை விஜய் சேதுபதி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது லாக் டவுன் நேரத்தில் தலைக்கு டை அடிக்காமல் விட்டு விட்டேன். முகத்திற்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் பூமியின் மீது புல் உண்டு. நடந்து கொண்டே இருந்தால் அதில் பாதை உருவாகும். நடக்காமல் விட்டால் மீண்டும் புல் முளைத்து விடும்.
மனிதருக்கு இதே Recover ஆகும் குணமுண்டு என கூறியுள்ளார்.