Bigil First Look Making Secret
Bigil First Look Making Secret

Bigil First Look Making Secret : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிகில்.

அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்த இப்படம் சுமார் 300 கோடி வசூலை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. மைக்கேல், ராயப்பன் என விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.

ராயப்பன் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசைனர் கோபி பிரசன்னா உருவாக்கியிருந்தார்.

இவர் தற்போது பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உருவான விதம் குறித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் செம வைரலாகி வருகிறது.

பிகில் படத்திற்காக மாஸான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைத்துக் கொடுத்ததற்காக தளபதி ரசிகர்கள் பலரும் கோபி பிரசன்னாவிற்கு நன்றி கூறி வருகின்றனர்.

https://twitter.com/JK21_Tweets/status/1294612589247442944?s=19
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.