Vijay salary for Master
Vijay Salary for Master : மாஸ்டர் படத்திற்காக தளபதி விஜய் வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

Vijay Salary for Master : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன, ரசிகர்கள் அனைவருமே இப்படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது விஜய் இந்த படத்திற்கு கிட்டத்தட்ட ரூ 85 கோடி சம்பளமாக வாங்கி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன, ஆனால் உண்மை என்ன என்பது தெரியவில்லை.

அசிங்கமான வார்த்தையோடு கஸ்தூரியை திட்டிய அஜித் ரசிகர்.. அவர் கொடுத்த பதிலை பாருங்க.!

மேலும் இதற்கு மேல் விஜயின் சம்பளம் ரூ 100 கோடி ஆகி விடும் எனவும் கூறப்படுகிறது, இதற்காக விஜய் ஒரு மாஸ்டர் பிளான் ஒன்றை உருவாக்கியுள்ளாராம்.

அதாவது படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமம் எவ்வளவு வியாபாரமாகிறதோ அதை தன்னுடைய சம்பளமாக கொடுக்குமாறு தயாரிப்பு நிறுவனங்களுக்கு கூறி வருகிறாராம்.

மேலும் சாட்டிலைட் ரைட்ஸ் தொகையை பிரித்து காஸ்ட் ஆப் ப்ரொடக்ஷன் ( இயக்குனர், மற்ற நடிகர்களின் சம்பளம் ) ஆக வைத்து கொள்ளுங்கள்.

இதற்கு மேல் வரும் வசூலை உங்களின் லாபமாக வைத்து கொள்ளுங்கள் என தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஐடியா கொடுத்து வருகிறார்.

தற்போது மாஸ்டர் படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமம் ரூ 85 கோடிக்கு சென்றிருப்பதால் விஜயின் சம்பளமும் ரூ 85 கோடி ரூபாயாக தான் இருக்கும் என பத்திரிகையாளர்கள் சிலர் கூறியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.