‘இட்லி கடை’ படத்திற்கு எதிராக ‘ஹாஸ்டேக்’ டிரெண்டிங்..

தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் கவனித்து வந்த ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை தற்போது அவரின் மகன் உதயநிதி கவனித்து கொள்கின்றார். அரசியல் களத்தில் தற்போது விஜய் vs உதயநிதி என்பது போல தான் போய்க்கொண்டு இருக்கின்றது.
விஜய் திமுக கட்சியை தனது கூட்டத்தில் விமர்சிப்பதும் பதிலுக்கு உதயநிதி ஸ்டாலின் பேசுவதும் இப்படியே இந்த விவாதம் போய்க்கொண்டு இருக்கின்றது. மேலும் இரு அரசியல் கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல்கள் உண்டாகி வருகின்றது. இந்த மோதல் தற்போது திரையுலகிலும் தொடரும் அபாயம் உருவாகியிருக்கிறது.
ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியது உதயநிதி ஸ்டாலின் என்பதால், விஜய் ரசிகர்கள் சிலர் boycott ரெட் ஜெயண்ட் என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதனால், இட்லி கடை படத்திற்கு பாதிப்பு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இட்லி கடை படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது. இப்படத்தின் மூலம் தான் திரைத்துறையில் உதயநிதியின் மகன் இன்பன் உதயநிதி திரைத்துறையில் நுழைகிறார்.
ஆனால், தற்போது வரை ஒருபக்கம் இந்த ஹாஷ்டேக் ட்ரெண்டிங்கில் போய்க்கொண்டு இருந்தாலும் மறுபக்கம் இட்லி கடை திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் அமோகமாகவே உள்ளது.
