அனைத்து தயாரிப்பாளர்களும் வெட்கப்பட வேண்டும்: ராம் கோபால் வர்மா பதிவு..

Web Ads

‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், பெங்காலி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது. இந்தப் படம் காந்தாரா நிகழ்வுகளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.

ரிஷப்பைத் தவிர, இப்படத்தில் ருக்மிணி வசந்த், ஜெயராம் மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்நிலையில் பாலிவுட்டில் சத்யா, ரங்கீலா போன்ற பல படங்களை இயக்கிய ராம் கோபால் வர்மா, இப்படத்தை பாராட்டியுள்ளார். ‘ரிஷப்பின் உழைப்பைப் பார்த்து இந்தியாவின் அனைத்து திரைப்படத் தயாரிப்பாளர்களும் ‘வெட்கப்பட வேண்டும்’ என அவர் கூறியுள்ளார்.

ராம் கோபால் வர்மா எக்ஸ் தளத்தில் , ‘காந்தாரா சாப்டர் 1 அற்புதமாக உள்ளது.. பிஜிஎம், சவுண்ட் டிசைன், ஒளிப்பதிவு, தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் விஎஃப்எக்ஸ் ஆகியவற்றில் @Shetty_Rishab மற்றும் அவரது குழுவினர் செய்துள்ள கற்பனைக்கு எட்டாத முயற்சியைப் பார்த்த பிறகு, இந்தியாவின் அனைத்து திரைப்படத் தயாரிப்பாளர்களும் வெட்கப்பட வேண்டும்.

உள்ளடக்கத்தை மறந்துவிடுங்கள், அது ஒரு போனஸ். அவர்களின் முயற்சி மட்டுமே #kantarachapter1-ஐ பிளாக்பஸ்டர் ஆக்கத் தகுதியானது. கிரியேட்டிவ் குழுவை சமரசமின்றி ஆதரித்த @HombaleFilms-க்கு சல்யூட்.! @Shetty_Rishab, நீங்கள் ஒரு சிறந்த இயக்குநரா அல்லது சிறந்த நடிகரா என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை’ என கூறியுள்ளார்.

ராம் கோபால் வர்மாவின் இந்தப் பாராட்டுக்கு பதிலளித்த ரிஷப், ‘நான் ஒரு சினிமா காதலன் மட்டுமே, சார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி, சார்’ என்று எழுதியுள்ளார். ஆர்.ஜி.வி தவிர, சந்தீப் ரெட்டி வங்கா, மாருதி, யஷ், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பிரபாஸ் ஆகியோரும் இப்படத்தைப் பாராட்டியுள்ளனர்.

ram gopal varma praises rishabh shetty and kantara movie
ram gopal varma praises rishabh shetty and kantara movie