Vijay About Yogi Babu Marriage
Vijay About Yogi Babu Marriage

தன்னுடைய திருமணம் குறித்து திரையுலக பிரபலங்கள் கூறியதைப் பற்றி பேசியுள்ளார் யோகி பாபு.

Vijay About Yogi Babu Marriage : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை அனைத்து படங்களிலும் யோகி பாபு காமெடி நடிகராக தற்போது நடித்து வருகிறார்.

இவருக்கு சமீபத்தில் உறவினர் பெண்ணோடு ரகசிய திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு யாரையும் அழைக்காத யோகி பாபு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.

ராதிகாவின் வீட்டில் நடந்த விஷேகம், குவிந்த வாழ்த்துக்கள் – வெளியான புகைப்படங்கள்!

அதற்காக திரையுலக பிரபலங்கள் பலருக்கும் அழைப்பிதழ் வைத்திருந்தார். ஆனால் தற்போது கொரானா வைரசால் அதுவும் நின்று விட்டது.

இந்தநிலையில் அவர் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயனின் மனைவி தன் மனைவியைப் பார்க்க வேண்டும் என கூறியதாகவும் இதனால் இரண்டு குடும்பமும் கோவாவில் சந்தித்து கொண்டதாகவும் அப்போது சிவா தங்க சங்கிலியை பரிசாக அளித்ததாகவும் யோகி பாபு கூறியுள்ளார்.

அதே போல் தன்னுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக விஜயை அழைக்கச் சென்றிருந்த போது அவர் சிறப்பாக பண்ணிடலாம்டா என கூறியதாக யோகி பாபு தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு மட்டுமல்ல எனக்கு திருமணம் ஆனது நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெயம் ரவி என அனைத்து நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் மகிழ்ச்சி தான் என கூறியுள்ளார்.